திருப்பூரில் ரூ.2.13 கோடியில் 7 திட்டப்பணிகள்

திருப்பூர், மே 26: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மண்டலம் 3 மற்றும் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என்.விஜயகுமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில், 7 புதிய திட்ட பணிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3, வார்டு 47 விஜயாபுரம் புண்ணியவதி சாலையில் பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.30 லட்சம், அரசின் சார்பில் ரூ.60 லட்சம் மொத்தம் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைத்தல், மண்டலம் 2 வார்டு 30 லட்சுமிநகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடம், வார்டு 30 லட்சுமிநகர் 50 அடி பிரதான சாலையில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 485 மீட்டர் நீளமுள்ள 2 புதிய சாலை, வார்டு 19 இ.ஆர்.பி. லே அவுட்டில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 312 மீட்டர் நீளமுள்ள 2 புதிய சாலை, வார்டு 17 நெசவாளர் காலனியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மைய கூடுதல் கட்டிடம் என மொத்தம் 7 புதிய பணிகளை ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.  இதில் மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ் மற்றும் தெற்கு மாநகர திமுக பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன் மற்றும் நிர்வாகி திலக்ராஜ், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: