கோலனிமட்டம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் மாசடையும் நீரோடை

ஊட்டி, மே 26: ஊட்டி அருகே கோலனிமட்டம் பகுதியில் நீரோடையில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவு கொட்டப்படுவதால் மாசடைந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அதிகரட்டி பகுதியில் உற்பத்தியாகி செலவிப்நகர், கோலனிமட்டம் வழியாக சுமார் 3 கிமீ தூரம் விவசாய விளைநிலங்களுக்கு மத்தியில் பயணித்து காட்டேரி அணையில் கலக்கும் நீரோடை உள்ளது. இந்த நீரோடையில் வரும் தண்ணீர் விவசாய காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரோடையை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக் குப்பைகள், உணவு கழிவுகள் போன்றவற்றை நீரோடையில் கொட்டுகின்றனர். இதனால், நீரோடை மாசடைந்து வருகிறது. இப்பகுதியில், போதிய குப்பை தொட்டிகள் இல்லாததும், குப்பைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததே ஆகும். எனவே, நீரோடையில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பதுடன், இப்பகுதியில் குப்பைகள் கொட்ட வசதியாக தொட்டிகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: