குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பல்

அந்தியூர், மே 26: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாசலியூரைச் சேர்ந்தவர் செந்தில் (45). இவர் பனங்காட்டில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று காலை இவரது மனைவி டீ கடைக்கு சென்றுவிட்டார். அவர் டீக்கடைக்கு சென்ற சிறிது நேரத்தில் அவருடைய கூரைவீடு எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.

Related Stories: