லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

மதுக்கரை,மே26: கோவையை அடுத்த க.க.சாவடி போலீஸ் எஸ்.ஐ. சரவணன் தலைமையில் போலீசார் அங்குள்ள ஆர்.டி.ஓ செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த இருவரை மறித்து பைக்கை சோதனை செய்தனர். பைக் சீட் கவருக்கு கீழே ரகசியமாக ஜிப் அமைத்து அதில் லாட்டரி சீட்டு கடத்தி வந்தது தெரிய வந்தது.விசாரணையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன்(34)கனகராஜ்(36)என்பது தெரிய வந்தது. இவர்கள் வாளையார் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியபடி, அங்கிருந்து கேரள லாட்டரிகளை திருட்டுத்தனமாக கடத்தி வந்து செட்டிபாளையம், ஒத்தக்கால் மண்டபம், கருமத்தம்பட்டி, அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 3300 லாட்டரி சீட்டு,கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: