தலைமறைவான குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்

திருச்சி, மே 26: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் மற்றும் உடமைகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் இமிகிரேசன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு எல்ஓசி வழங்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் இமிகிரேசன் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா வல்லம் படுகையை சேர்ந்த இளங்கோவன் மகன் இலந்தன் (31) என்பதும், இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வேப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் இலந்தனை நேற்று கைது செய்து அழைத்து சென்றனர்.

Related Stories: