எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி

கரூர், மே 26: கரூர் கூடைப்பந்து கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 62ம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த 21ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மே 21ம்தேதி முதல் 27ம்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டிகள் 27ம்தேதி நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் முதலில், லீக் போட்டிகளாகவும், பின்னர் நாக் அவுட் போட்டிகளாகவும் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை சென்ட்ரல் செக்ரடிரியேட் அணியுடன் கேஎஸ்இபி அணி மோதியது. இதில், சென்ட்ரல் செக்ரடியேட் அணி 87-84 புள்ளிக் கணக்கில் வென்றது. தொடர்ந்து, இந்தியன் நேவி அணி 80-77 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை வென்றது. மற்றொரு போட்டியில் ஏர் போர்ஸ் அணி 69-67 என்ற புள்ளிக் கணக்கில் டிஆர்டபிள்யூ அணியை வென்றது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை இந்தியன் வங்கி அணியுடன் கேஎஸ்இபி அணியும், பாங்க் ஆப் பரோடா அணியுடன் சென்னை ஸ்போட்ஸ் ஹாஸ்டல் அணியும், சென்ட்ரல் செக்ரடியேட் அணியுடன் டிஆர்டபிள்யூ அணிகளும் மோதின. போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 27ம்தேதி அன்று நடைபெற்று பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

Related Stories: