கடலூர் எஸ்பி டெக்ஸ்சில் கோடை பரிசு மழை கொண்டாட்டம்

கடலூர், மே 26: கடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்பி டெக்ஸ் ஜவுளி கடையில், கோடை மழை ஸ்லோகம் திருவிழாவை முன்னிட்டு இலவச பட்டு புடவைகள் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை பரிசு மழை கொண்டாட்டம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பட்டுப் புடவை தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. நாள்தோறும் இதுபோன்று ஆறு நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கோடை கொண்டாட்டத்தில் பங்கு பெறுங்கள், எஸ்பி டெக்ஸ்சில் ஜவுளிகளை வாங்குங்கள், ஸ்லோகன் எழுதுங்கள், பரிசுகளை வெல்லுங்கள் என நிர்வாக தரப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் பட்டுப்புடவை பரிசு வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். வரும் ஜூன் 6ம் தேதி வரை சிறப்பு கோடை பரிசு மழை கொண்டாட்டம் தொடர்கிறது. ரூ.ஆயிரத்துக்கு மேல் கடலூர் எஸ்பி டெக்ஸ்சில் ஜவுளிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசு. மேலும் ஆயிரம் ரூபாய்க்கு ஜவுளி வாங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆயிரத்திற்கும் கூப்பன் வழங்கப்படுகிறது என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எஸ்பி டெக்ஸ் நிறுவனர் ஜெயபால், உரிமையாளர் சுகுமார் காந்தி மற்றும் பன்னீர் ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு இலவச பட்டுப்புடவை வழங்கினர்.

Related Stories: