×

மங்கலம்பேட்டையில் மங்களநாயகி அம்மன் கோயில் தேர் திருவிழா


விருத்தாசலம், மே 26: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் பிரசித்தி பெற்ற மங்களநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் தேர் திருவிழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அலங்கரிக்கப்பட்ட மங்களநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ரிஷப வாகனம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், யானை வாகனம், முத்துப் பல்லக்கு, வெட்டு குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று காலை நடந்தது. ஊர் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேர்த் திருவிழாவை துவக்கி வைத்தனர். மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று, பின்னர் கோயிலை வந்தடைந்தது.

மங்கலம்பேட்டை, கோவிலானூர், பள்ளிப்பட்டு, புல்லூர், விசலூர், கர்ணத்தம், காட்டுப்பரூர், முகாசாபரூர், கோணாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக கோயிலின் ஐதீக நிகழ்ச்சியான 9 ஆடுகள் மற்றும் ஒரு எருமை மாடு பலி கொடுத்த பின் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை ஆதீன பரம்பரை அறங்காவலர் ஜமீன் வீரசேகர பொன்னம்பல வேலுசாமி கச்சிராயர், முகாசாபரூர் அரண்மனையினர், உற்சவதாரர்கள் மற்றும் மங்கலம்பேட்டை பேரூர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Mangalanayaki Amman Temple Chariot Festival ,Mangalampet ,
× RELATED மங்கலம்பேட்டை அருகே 60 அடி கிணற்றில் ...