×

கடலில் கரை ஒதுங்கிய பூச்சிக்கொல்லி மருந்துகள்

சாயல்குடி, மே 25: நரிப்பையூர் கடற்கரையில் ஒதுங்கிய பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை கைப்பற்றி கடலோர காவல் படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கடற்கரை பகுதியில் கடலோர  காவல்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரை ஓரங்களில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடந்துள்ளன. இதனையடுத்து கரை ஒதுங்கிய 184 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் கரை ஒதுங்கிய பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றபோது தவறி கடலில் விழுந்து இருக்கலாம் அல்லது கடத்திச் சென்றவர்கள் கடலோர காவல் படையினருக்கு பயந்து கடலில் வீசி சென்று இருக்கலாம் என பல்வேறு கோணங்களில் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கைப்பற்றிய பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை சுங்க இலாகாவிடம் ஒப்படைத்து விசாரணை செய்து வருகின்றனர். கடலில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...