ஓவேலி அருகே காட்டு யானை சேதப்படுத்திய கார்

கூடலூர், மே 25: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், செல்வபுரம், ஆரூற்றுபாறை, சுபாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் வரும் ஒற்றை காட்டு யானை பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தி வருகிறது.பகல் நேரங்களில் இங்கு உள்ள தனியார் காப்பி, ஏலக்காய் தோட்டங்களிலும் அருகில் உள்ள வனப் பகுதிகளிலும் இருக்கும் இந்த யானை இரவு நேரங்களில் வெளியேறி வீடுகளின் சமையலறை பகுதி, தண்ணீர் தொட்டிகள், கார் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியது.

இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனப்பகுதியில் யானை கூட்டங்களில் இருந்து பிரிந்து தனியாக ஊருக்குள் சுற்றித் திரியும் இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் அச்சம்விஐபிக்கள் வருகையும் காரணம்ஊட்டியில் கோடை சீசன் துவங்கிவிட்டாலே கவர்னர், முதல்வர் மற்றும் ஜனாதிபதி என மே மாதம் முழுவதும் விஐபிக்கள் ஊட்டி வருகின்றனர். இது போன்ற சமயங்களில், விஐபிக்களின் வாகனங்கள் (கான்வாய்) செல்ல அனைத்து சாலைகளையும் போலீசார் அடைப்பதால், சில சமயங்களில் 2 மணி நேரம் வரை சுற்றுலா பயணிகள் வாகனங்களில் காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே, இது போன்று விழா சமயங்களில் நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்க ஊட்டிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்கின்றனர்.

Related Stories: