ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தொடர்ந்து சர்க்கீயூட் பஸ்கள் இயக்க முடிவு

ஊட்டி, மே 25: ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தொடர்ந்து சர்க்கீயூட் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.கோடை சீசனில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்வதால், கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து கழகம் சார்பில் சர்க்கீயூட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இயக்கப்படும் இந்த பஸ்கள் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  குறிப்பாக, நடுத்தர மக்கள் இந்த சர்க்கீயூட் பஸ்களில் சென்று அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் மலர் கண்காட்சி நடந்த ஐந்து நாட்கள் 25க்கும் மேற்பட்ட சர்க்கீயூட் பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்கியது.

தற்போது, சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்துள்ள நிலையில், தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், தற்போது 8க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டி வந்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சர்க்கீயூட் பஸ்களில் பயணிக்க விருப்பம் தெரிவிக்கும் நிலையில், இம்மாதம் இறுதி வரை சர்க்கீயூட் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

Related Stories: