ஊட்டியில் மிதமான காலநிலை

ஊட்டி, மே 25: ஊட்டியில் வெயில் குறைந்து நேற்று மிதமான காலநிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், ஊட்டியிலும் வெயில் வாட்டி வந்தது. அதேசமயம் கடந்த வாரம் துவங்கிய மழை, சுமார் ஒரு வாரம் ஊட்டியில் கொட்டி தீர்த்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மழை குறைந்து வெயில் காணப்பட்டது. மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று காலை முதலே வானம் சற்று மந்தமாக காணப்பட்டது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

மேலும், ஊட்டியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த சில தினங்களாகவே மிதமான காலநிலை நிலவுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கி தவிக்கும் சமவெளிப் பகுதி மக்கள் இந்த இதமான காலநிலையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. புறநகர் பகுதிகளில் சில இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது.

Related Stories: