விஷம் குடித்து பழக்கடைக்காரர் பலி

கோவை, மே 25:  கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் திலகராஜ் (57). இவர் சவுரிபாளையம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். 30 வருடங்களுக்கு முன்பு இவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இவரின் மகள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நீண்ட காலமாக சர்க்கரை நோய் பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நோய் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதனால், மருத்துவர்கள் அவரின் கால்களை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சாணி பவுடரை மதுவில் கலந்து குடித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: