திமுக பொதுக்கூட்டம் 20 பஞ்சாயத்துகளுக்கு ரூ.73 லட்சத்தில் குடிநீர், வடிகால்

கோவை, மே 25:  கோவை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடப்பாண்டில் 20 பஞ்சாயத்துக்களில் உள்ள கிராமங்களில் குடிநீர் சப்ளை செய்யும் பணிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 73 லட்ச ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்படவுள்ளது. வீடு வீடாக குடிநீர் இணைப்பு, பொது குடிநீர் குழாய் மற்றும் சாக்கடை வடிகால் வசதி செய்து தரப்படும். இந்த திட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமங்களில் தெரு மின் விளக்கு, ரோடு, சாக்கடை, குடிநீர் என நான்கு அடிப்படை வசதிகள் கட்டாயம் நிறைவேற்றவேண்டும். பொதுமக்கள் கிராம சபா கூட்டம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டங்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி முழு வளர்ச்சி பெற்ற கிராமங்களாக மாற்றவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட அளவில், 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வீடு வீடாக குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க முடியாத நிலையிருக்கிறது. ஆழ்குழாய் குடிநீர் மட்டுமே பல கிராமங்களில் வழங்கப்படுகிறது. அனைத்து கிராமங்களிலும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். ஜல் ஜீவன் மிசனில் குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: