நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,  மே 25: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள்  சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு  கிளை செயலாளா் ரதீஸ் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பிரகாஷ், ரியாஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் ரயில்  டிரைவர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் சங்க உரிமைகளை பறிக்கும் விதமாக  மிரட்டியும், தொழில் ரீதியான சட்ட விரோத நடவடிக்கை எடுக்கும் பாலக்காடு  டிவிசன் ரயில்வே மேலாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதில், ஏராளமான ரயில் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: