டிராக்டர் உரிமையாளர் தற்கொலை

ஈரோடு, மே 25: பர்கூர்  அடுத்துள்ள தேவர்மலை பாறையூரை சேர்ந்தவர் நாகன் என்கிற சின்னராஜ் (32).  இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து உழவு ஓட்டும் வேலை செய்து வந்தார். கடந்த  22ம் தேதி வேலைக்காக வெளியே சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு  திரும்பவில்லை. இந்நிலையில் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில்  பயன்படுத்தப்படாமல் உள்ள ஒரு வீட்டின் விட்டத்தில் சின்னராஜ் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டது நேற்று முன்தினம் தெரியவந்தது. இது குறித்து மனைவி  சுதாமணி கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: