×

ஓட்டப்பிடாரத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் பஞ். தலைவர் இளையராஜா வழங்கினார்

ஓட்டப்பிடாரம், மே 25: ஓட்டப்பிடாரம் வட்டம்  அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, குலசேகரநல்லூர், குறுக்குச்சாலை, வேப்பலோடை, மேல அரசடி ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா, காணொலி மூலம் திரையிடப்பட்டது. ஓட்டப்பிடாரத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு  தென்னங்கன்றுகள் கைத்தெளிப்பான், பேட்டரி தெளிப்பான், வளர் சாகுபடிக்கான பொருட்கள், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான இடுபொருட்களை ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான இளையராஜா வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் மகேஷ், உதவி அலுவலர் விஜயகுமார், ஆவின் முத்துவேல் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ottapidaram Panch ,Ilayaraja ,
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...