திருவாரூரில் நாளை நடக்கிறது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவாரூர், மே 25: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் நடைபெறுவதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரதி மாதம் தோறும் 2ம் வியாழன் மன்னார்குடி ஆர்.டி.ஒ அலுவலகத்திலும், 4ம் வாரம் திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்திலும் நடத்தப்படஉள்ளது. அதன்படி, கடந்த 12ம்தேதி மன்னார்குடி ஆர்.டி.ஒ அலுவலகத்தில் இந்த குறைதீர் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் திருவாரூர் கோட்டத்திற்கான குறைதீர் கூட்டமானது நாளை (26ம் தேதி) காலை 11 மணியளவில் திருவாரூர் தெற்கு வீதியில் இயங்கி வரும் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திடகேட்டுக் கொள்ளப்படுகிறது. அன்றையதினம்,மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும். வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்குகீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். வருகையின் போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டுவரவேண்டும். இதற்குமுன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கானஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: