டிஎன்பிஎஸ்சி 32 மாதிரி தேர்வுகளில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டு

கரூர், மே25: கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலங்கரை விளக்கம் திட்டத்தின்கீழ் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பயிற்சி வகுப்பு மற்றும் 32 மாதிரித் தேர்வுகளில் பங்கேற்று முதன்மை மதிப்பெண் பெற்ற போட்டித் தேர்வு மாணவ, மாணவிகளான மோனிஷா, மகாலட்சுமி, லாவண்யா, தீபன், பார்த்தீபன் ஆகியோர்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து போட்டித் தேர்வு மாணவர்களுக்கு ரூ. 1000த்துக்கான ரொக்கப்பரிசு மற்றும் இயர்புக் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன், உதவி திட்ட அலுவலர் தமிழரசி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: