என்னை தீர்த்துக்கட்ட நினைத்ததால் பைனான்சியரை கொன்றேன்: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

அண்ணாநகர்: சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் (36), கடந்த 18ம் தேதி ஷெனாய் நகர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த 20ம் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி உஷ் என்கிற சந்திரசேகர் (28), இவரது கூட்டாளி ரோகித்ராஜ் (32) ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை அமைந்தகரை போலீசார் 3 நாள் காவலில் விசாரித்து வருகின்றனர்.

இதில், ரோகித்ராஜ் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கொலையான ஆறுமுகத்தின் நண்பர் சிவக்குமாரை (42), கடந்த 2020ம் ஆண்டு நான் வெட்டிக் கொன்றேன். இதற்கு பழிக்குப்பழியாக என்னை கொல்ல ஆறுமுகம் திட்டம் தீட்டினார். இதனால், முன்னெச்சரிக்கையாக ஆறுமுகத்தை கொன்றேன். இவ்வாறு கூறியுள்ளார். இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் யார், என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: