பழிக்குப்பழியாக வாலிபரின் விரல் துண்டிப்பு: 3 பேர் கைது

பல்லாவரம்: அனகாபுத்தூர், சர்வீஸ் ரோடு, திருமலை நகர் 2வது தெருவை சேர்ந்த பாண்டியன் (38), கடந்த மாதம் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த சுந்தர் மற்றும் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த பாண்டியன், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த சுந்தர் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர்,  பாண்டியனை சுற்றி வளைத்து, கத்தி, உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் அவரது வலது கை ஆள்காட்டி விரல் துண்டானது.

 அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (50), கார்த்திக் (24), குமரன் (43) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: