ஆர்வம் தூண்டும் வகையில் கற்பித்தல் அமைய வேண்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருப்பூர், மே 24: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி, திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள அமுதா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் இரு நாட்கள் நடந்தது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் கற்றல், கற்பித்தல் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணி, மாநில கருத்தாளர்கள் காத்தவராயன் தியாகராஜன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தனர்.

மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணி கூறுகையில், கொரோனாவால் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் வகையில், மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த செயல்பாடுகள் மூலம் கற்பிப்பது தற்போதைய சூழலில் அவசியமாக இருக்கின்றது என்றார்.

புதிய குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கைநகராட்சித்  தலைவர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: நகராட்சியில், புதிதாக குடிநீர்  இணைப்பு வழங்கி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது புதிதாக  குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 5ம்  தேதி முதல் விண்ணப்பங்கள் வாங்கப்படும். வீட்டு இணைப்புக்கு ரூ.5  ஆயிரமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரமும் வைப்புத்தொகையாக  பெறப்படும். சொத்துவரி ரசீதுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை குடிநீர்  இணைப்பு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

Related Stories: