காலநிலை மாற்றத்தால் காய்கறிகளுக்கு மருந்து தெளிப்பு

ஊட்டி, மே 24: நீலகிரியில் மலை காய்கறி பயிர்களை நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் மலை காய்கறி கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட மலை காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  மேலும், நாள்தோறும் வெயில், மழை மற்றும் மேக மூட்டம் என மாறி மாறி காலநிலை நிலவுகிறது. இதனால், பசுந்தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மாறுபட்ட காலநிலையால் காய்கறிகள் பாதிக்காமல் இருக்க தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், உரமிடும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: