நீலகிரியில் மீண்டும் வெயில் அதிகரிப்பு

ஊட்டி, மே 24: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால், தாவரவியல் பூங்கா சேறும் சகதியுமாக மாறியது. இதனால், சுற்றுலா பயணிகள் எங்கும் அமர முடியாமல், சேற்றிலேயே மலர் அலங்காரங்ககளை பார்வையிட வேண்டியிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில் அடித்த நிலையில், தாவரவியல் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைத்து மலர் அலங்காரங்களையும் பொறுமையாக சுற்றி பார்த்தனர்.அதேபோல், புல் மைதானங்களும் காய்ந்த நிலையில், சேற்றில் சிக்காமல் சுற்றுலா பயணிகள் பூங்காவையும், மலர் அலங்காரங்களையும் சுற்றி பார்க்க முடிந்தது. ஒரு வாரத்திற்கு பின் ஊட்டியில் மழை ஓய்ந்து வெயில் அடித்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: