ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு

ஊட்டி, மே 24:  ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா கோத்தகிரியில் தொடங்கிய நிலையில் கடந்த 20ம் தேதி தாவிரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி துவங்கியது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களால் ஆன வேளாண் பல்கலைக்கழகத்தின் முகப்பு தோற்றம், ஊட்டி 200, பழங்குடியினர் உருவ பொம்மைகள் என பல்வேறு மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியை கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில், இந்த மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை சிறந்த மலர் அலங்காரங்கள், தோட்டங்களுக்கான பரிசுகள் வழங்கப்படுகிறது.

Related Stories: