முதல்வரிடம் செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு

பெ.நா.பாளையம். மே 24:  கோவை தடாகம் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர்.ராமச்சதிரன் தலைமையில் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: செங்கல் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள தடையினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலின் போது துடியலூரில் நடந்த தேர்தல் பிரசாராத்தின் போது மீண்டும் செல்கல் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் அடிப்படையில் செங்கல் தொழில் தொடங்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்தினர்  வாழ்வாதாரம் அடைய உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின்போது வனத்துறை அமைச்சர்  ராமசந்திரன், எம்பி. ராசா, முன்னாள் எம்எல்ஏ சின்ராஜ், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் முபாரக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: