முதல்வரிடம் கோரிக்கை மனு ராஜீவ்காந்தி 31-வது நினைவுதினம் ஏழைகளுக்கு அன்னதானம்

கோவை,  மே 24: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி 31-வது  நினைவுதினம் கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு  நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள்  ராஜீவ் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், மாவட்ட தலைவர்  வி.எம்.சி.மனோகரன் ஏழைகளுக்கு  அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு   நிர்வாகிகள் அழகு ஜெயபாலன், எம்.என்.கந்தசாமி, நவீன்குமார், பழையூர்  செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் சொக்கம்புதூர்  கனகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஆகாஷ், செல்வபுரம் ஆனந்த், சோ.மணி,  வாணி மோகன், வாணி முருகன், ரங்கசாமி, காட்டூர் சோமு, செல்வபுரம்  நசீர்உசேன், சக்தி சதீஷ், பேரூர் மயில், கோவை அனீபா, சாமிநாதன், மாசாணன்,  பொன்ராஜ், ரபீக், ஜாபர்அலி, செல்லபாண்டி, முஸ்தபா, கதிரேசன், மாரிமுத்து,  ராம்கி, சாய்ஸ் சாதிக், கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன்,   சோமனூர் நகர தலைவர் பாலு, அசோக்குமார், கனகராஜ், மோகன்ராஜ், அருண்,  புருஷோத்தமன், நவீன்  சக்கரவர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில்,  சர்க்கிள் தலைவர் ஐ.எஸ்.மணி நன்றி கூறினார்.

Related Stories: