கோபி மொடச்சூரில் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா

கோபி, மே 24:  முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்த கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.முதலமைச்சர் நேற்று காணொலி காட்சி மூலமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஊராட்சியிலும் காணொலி மூலமாக திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, ஒன்றிய செயலாளர் கோரக்காட்டூர் ரவி, வேளாண்மை துணை இயக்குனர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் முதல்கட்டமாக வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு கைத்தெளிப்பான், 5 பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பான், 3 தென்னை மரக்கன்றுகள், ஒரு எக்டேருக்கு 5 கிலோ வீதம் வரப்பில் பயிரிட 15 விவசாயிகளுக்கு உளுந்து வழங்குதல், தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், 5 விவசாயிகளுக்கு விதை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சசிகலா, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ஜீவதயாளன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கருப்புசாமி, உறுப்பினர்கள் வாசுகி, வெள்ளியங்கிரி, சம்பூர்ணம் மற்றும் மொடச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.மொடக்குறிச்சி: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 46புதூர், துய்யம்பூந்துறை, பூந்துறை சேமூர், லக்காபுரம், நஞ்சை ஊத்துக்குளி, எழுமாத்தூர், ஆனந்தம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, ஈஞ்சம்பள்ளி, கணபதிபாளையம் என 11 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

பூந்துறை சேமூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு விதைகள், கைத்தெளிப்பான், தென்னங்கன்று, பயிர் ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் தெய்வீகம், மண் பரிசோதனை அலுவலர் செந்தில் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் லக்காபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு லக்காபுரம் ஊராட்சி தலைவர் சாலை மாணிக்கம் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை அலுவலர் ரேகா, உதவி அலுவலர் சபரீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினர்.

Related Stories: