கரும்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம், மே 24:    

நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் இ.ஐ.டி பாரி அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு அறிவித்த கரும்பு ரகங்களை நடவு செய்தால் ஆலை நிர்வாகமே பதிவு செய்திடு, எரிந்த கரும்புக்கு பிடித்தம் செய்த பணத்தை திரும்ப கொடுத்திடு. கரும்பில் கழிவு என்ற பெயரில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.ஐ.டி பாரி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார்.

 விவசாயிகள் சங்க தலைவர் சம்பத்குமார், இ.ஐ.டி பாரி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ரவிந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், சுப்புரமணியன், ஜெயதேவன், தர், சரவணன், ஜெகதீசன், சாமிப்பிள்ளை, வி.சி.க நகர செயலாளர் திருமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: