விருத்தாசலம் நகர்மன்ற ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம், மே 24:  விருத்தாசலம் நகர மன்ற அவசர ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலம் நகராட்சியில் நடந்தது. நகர மன்றத் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். முன்னதாக நகராட்சி ஆணையாளர் சசிகலா வரவேற்றார். சொத்து வரி உயர்வு குறித்து மன்ற பொருள் பார்வைக்கு வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் தங்கள் வார்டுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குடிநீர் பிரச்னையை சரிசெய்வது, சாலை வசதி ஏற்படுத்தி தருவது, பன்றிகள் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்னைகளை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து அனைத்து குறைகளும் விரைவில் சரி செய்யப்படும் என நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் உறுதியளித்தார். முன்னதாக மன்ற பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் மட்டும் வெளிநடப்பு செய்தனர்.  இதில் நகர்மன்ற கவுன்சிலர்கள் பாண்டியன், தங்க அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, அன்சர் அலி, பக்கிரிசாமி, ராஜ்குமார், சேகர், வெங்கடேசன், கருணாநிதி, முத்துக்குமரன், சிங்காரவேல், அறிவழகி, கரிமுன்னிஷா, அருள்மணி, குணசுந்தரி, குமாரி, சுந்தரி, தீபா உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Stories: