கவுன்சிலர் ஆட்சியரிடம் மனு

கடலூர், மே 24: பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது ஊராட்சியில் அடிப்படை தேவைகளான, குடிநீர் வழங்குவதிலும், மின்விளக்கு வசதியிலும் குறைபாடு உள்ளது. பொதுமக்களுக்கு தினந்தோறும் முறையாக, குடிநீர் வழங்குவது இல்லை. மின் விளக்குகளும் சரியாக எரிவது இல்லை. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: