கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

செஞ்சி, மே 24: மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்சேவூர் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு திண்டிவனம் நோக்கி பாமகவை சேர்ந்த சிவக்குமார் எம்எல்ஏ சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளம் தோண்டி ஆற்றின் அருகே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் படுகாயம் கீழே கிடந்தார். இதனை பார்த்த எம்எல்ஏ சிவக்குமார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அவரை மீட்டு மேல்சித்தாமூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் காரில் வந்தவர்களை மாற்று வாகனம் வரவழைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

செஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 2 வாகனங்களும் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. விசாரணையில், விபத்தில் சிக்கியவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரத்தி கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்தது. இவர் மேல்சித்தாமூரில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories: