விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் பாரம்பரிய மீன்பிடி திருவிழா கோலாகலம்

விராலிமலை, மே 24: விராலிமலை அருகே மேப்பூதகுடி பெரியகுளத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பிடித்து சென்றனர். விராலிமலை அருகே உள்ள பெரியகுளத்தில் நேற்று (திங்கள்கிழமை) காலை மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக சமுக வலைதளங்களில் செய்தி பரப்பபட்டது. இக்குளத்தில் மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதையொட்டி கடந்த 15 நாட்களாக குளத்தை சுற்றி போக்கஸ் லைட் அமைத்து இரவு முழுவதும் அதை எரியவிட்டு அவ்வூரை சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் இரவு குளத்தில் காவல்காக்க வேண்டும். ஊர் சார்பாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அனுமதியில்லாமல் யாரேனும் இரவு நேரங்களில் மீன் பிடிப்பதை தடுத்து விடலாம் என்ற நோக்கில் ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்து கடந்த 15 நாட்களாக குளத்தில் இரவு காவலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் நேற்று இருசக்கர வாகனங்களில் குடும்பம், குடும்பமாக மேப்பூதகுடி வந்திருந்து அதிகாலை முதலே குளத்தின் கரையில் திரண்டனர். பரந்து விரிந்த இந்த பெரிய குளத்தில் நிரம்பிருந்த நீர் தற்போது வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. குளத்தில் சிறிதளவே நீர் இருப்பதால் அதிகளவு மீன் வலையில் சிக்கும் என்பதை அறிந்த மக்கள் அதிகளவு குளத்தில் திரண்டனர். இதனையடுத்து காலை மேப்பூதகுடி ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகவள்ளி மணிகண்டன் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசியதை தொடர்ந்து கரையில் காத்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்திற்குள் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் விரால், கெலுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட வகையான மீன்கள் விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானோரின் வலைகளில் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றனர்.

Related Stories: