பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.5.50 லட்சம் நலஉதவி

வகுப்பறையில் மாரடைப்பு

கல்லூரி மாணவி மரணம்

பெரம்பலூர், மே 24: பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர்  வெங்கடபிரியா வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், சிறு குறு தொழிலுக்கான ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வீதம் ரூ.2 லட்சம் மானியமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ3.50 லட்சம் நிவாரண நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தாய்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் உருவங்கள் அடங்கிய நிரந்தரப் புகைப்படக் கண்காட்சினை கலெக்டர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர் பொ துமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு பேசினார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவி த்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 175 மனுக்களை அளித் திருந்தனர். கூட்டத்தில் டிஆர்ஓ அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முக மைத் திட்ட இயக்குநர் லலிதா, தனித்துணை கலெக்டர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவவலர் பொம்மி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொணடனர்.

Related Stories: