நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாகை,மே 24: நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செந்தில்குமார், இணை செயலர் சங்கர்கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை செயல் அதிகாரி சந்திரசேகர் மற்றும் கல்லூரி முதல்வர் ராமபாலன் தலைமை ஆகியோர் தலைமை வகித்தனர். ஆசியா பால் கார்ப்பரேஷன் ரீஜினல் ஹெச்ஆர் ஹெட் ரத்தினவேல்ராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழக அழகப்பா கல்லூரி டீன் ஜெயவேல் ஆகியோர் 661 மாணவ, மாணவியகளுக்கு பட்டங்களை வழங்கினர். தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக அழகப்பா கல்லூரி டீன் ஜெயவேல் பேசியதாவது: பட்டம் பெற்ற மாணவர்கள் கல்வி தகுதியில் மட்டும் இன்றி எல்லாவற்றிலும் தகுதி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளீர்கள். பட்டம் பெற்றவர்கள் தொழில் முனைவோர்களாக முன் வரவேண்டும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்க வேண்டும். சமுதாயத்திற்கு எடுத்துகாட்டாக திகழக வேண்டும் என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேர்வுத்துறை நெறியாளர் சின்னதுரை, அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: