×

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்

தூத்துக்குடி, மே 24: தூத்துக்குடியில்  உப்பள தொழிலாளர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை,  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களுக்கான மருத்துவ  முகாம் நடந்தது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர், மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து உப்பள  பகுதிகளுக்குச் சென்று உப்பளத் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
 தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும்  திட்டத்தின் கீழான மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி  மேயர் ஜெகன்பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர்  ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி,  நிர்மல்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்  கோட்டுராஜா, கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், கீதாமுருகேசன், இசக்கிராஜா,  ஜான்சிராணி, விஜயகுமார், வைதேகி, சரவணக்குமார், மருத்துவ அணி அமைப்பாளர்  அருண்குமார், மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், தொண்டரணி அமைப்பாளர்  ரமேஷ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், இலக்கிய அணி அமைப்பாளர் நலம்  ராஜேந்திரன், மாணவரணி துணை அமைப்பாளர் துணை அமைப்பாளர் பால்மாரி,  அண்ணாநகர் பகுதி துணை செயலாளர் பாலு, தகவல் தொழில்நுட்ப அணி  சுரேஷ்குமார், வர்த்தக அணி கிறிஸ்டோபர் விஜயராஜ், தொமுச மரியதாஸ்,  கோகுல்நாத், முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...