மா.கம்யூனிஸ்ட் 4ம்தேதி ஆர்ப்பாட்டம்

கடலூர், மே 24:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்ட செயலாளர் மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு, ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பு, மாற்று இடத்திற்கான பட்டா மற்றும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 3வது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலத்தை கையகப்படுத்த கூடாது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வருகிற 4ம் தேதி கம்மாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். எனவே அனைத்து பகுதி விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: