திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்

பெரம்பூர்: கொடுங்கையூர் எழில் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (25), இன்ஜினியர். இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் காவியாவுக்கும் (19), கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காவியா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், காவியாவுக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆனதும், அதனால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சிரஞ்சீவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவியாவின் தந்தை ரவி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Related Stories: