×

குளித்தலையில் ஏடிஎம் முன்பு சிமெண்ட் சிலாப் உடைந்து சேதம்

குளித்தலை, மே 21: குளித்தலை காவேரிநகர் அருகே எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையம் முன்பு உடைந்த சிமென்ட் சிலாப்பை சரி செய்ய வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை காவேரிநகர் அருகே எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் நபர்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் உரிமையாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த ஏடிஎம் மையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ஏடிஎம் மையத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப்பால் உடைந்த நிலையில் இருப்பதால் வயது முதியவர்கள் சிறியவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட ஸ்டேட் வங்கி வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏடிஎம் மையம் முன்பு உடைந்த நிலையில் உள்ள சிமெண்ட் சிலாப்பை அப்புறப்படுத்தி புதிதாக அமைக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு