×

கலெக்டர் தகவல் அரசு அருங்காட்சியகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா

கரூர், மே 21: ரூர் அரசு அருங்காட்சியகத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கவித்தூவல்-2022 என்ற தலைப்பில் அரசு கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் மணிமுத்து வரவேற்றார். அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சுதா முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட திக பொதுக்குழு உறுப்பினர் அன்பு கலந்து கொண்டு நிகழ்வு குறித்து பேசினார்.

முனைவர் கடவூர் மணிமாறன் கலந்து கொண்டு, புரட்சிக்கவி பாரதிதாசன் என்ற தலைப்பில் பேசினார். தமிழ்ப்போராயம் அமைப்பு நிர்வாகி ஸ்டாலின் நன்றி கூறினார். கவிதை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்த விழாவில் பரிசளிப்பு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : Bharathidasan Birthday Poetry Competition Prize ,Government Museum of Information ,
× RELATED சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு