×

கோவில்பட்டி யூனியன் கூட்டம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவில்பட்டி, மே 21:  கோவில்பட்டி யூனியன் கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டி  ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது. யூனியன் சேர்மன் கஸ்தூரி  சுப்புராஜ் தலைமை வகித்தார். பிடிஓக்கள் சுப்புலட்சுமி,  சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். கூட்டத்தில் வரவு செலவு உள்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  யூனியன் துணை தலைவர் பழனிசாமி மற்றும் 13 வார்டு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.

Tags : Kovilpatti Union ,
× RELATED கோவில்பட்டி யூனியனில் மேலும் மூவருக்கு கொரோனா