கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கம்

கோவில்பட்டி, மே 21: கோவில்பட்டி  கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் “இந்திய  பெண் இலக்கியவாதிகளின் மனஉறுதி” எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு  நடைபெற்றது. கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலர் கே.ஆர்.அருணாசலம் தலைமை  வகித்தார். கே.ஆர்.கல்லூரி முதல்வர் மதிவண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் சாதுசுந்தர்சிங் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நெல்லை  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் வேடமுத்தன் கலந்து கொண்டு இந்திய பெண் இலக்கியவாதிகளின் மனஉறுதி  என்ற தலைப்பில் பேசினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு  வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி மகாலட்சுமி  நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் மற்றும்  துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: