நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது

பண்ருட்டி, மே 21: பண்ருட்டி அருகே நெல்லிக்குப்பம் ஜீவா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பாலாஜி (37). இவர் நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் அதே பகுதியில் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து வீட்டில் தனியாக இருந்த நர்சிங் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அந்த மாணவி நர்சிங் பள்ளிக்கு போகும்போதும், வரும்போதும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.

Related Stories: