மின் ஊழியர் சங்க வாயிற்கூட்டம்

விருத்தாசலம், மே 21: தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் விருத்தாசலம் மின்வாரிய கோட்ட  செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது. கோட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை  பொது செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர் காங்கேயன், மாவட்ட துணை தலைவர்  ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் தேசிங்கு, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து இக்கூட்டத்தில் மின்வாரிய  ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை பெற்றுத்தர வேண்டும்.

பகுதி நேர ஊழியர்களுக்கு நிரந்தரம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  தினக்கூலி 380 மற்றும் நிரந்தரம் பெற்றிட வேண்டும். போராடி பெற்ற மின்வாரிய  ஊழியர்களின் சலுகைகளை பறிக்கும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கம் சார்பில் உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

Related Stories: