எடையூர்-மன்னம்பாடி இடையே மேம்பாலம் அமைக்கும் பணி

விருத்தாசலம், மே 21:  விருத்தாசலம் அடுத்த எடையூருக்கும்- மன்னம்பாடிக்கும் இடையே உப்போடையில் அமைந்துள்ள தரைப்பாலம் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தரைப்பாலம் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும் போது சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விருத்தாசலம் மற்றும் வேப்பூர் பகுதியை சென்றடைகின்றனர். இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2021-22 ஆண்டிற்கான நபார்டு வங்கி திட்டத்தில் ஒரு கோடியே 55 லட்சம் செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. விருத்தாசலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் விருத்தாசலம் தாசில்தார் தனபதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கல்யாண சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல், ஒன்றிய துணை செயலாளர் சாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்தகுமார்,

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குமார், கவுன்சிலர்கள் செல்லதுரை, பரமகுரு, அய்யாசாமி, மாவட்ட பிரதிநிதி பொன் சிவகுமார், மாவட்ட கவுன்சிலர் ராஜேஸ்வரி சுப்ரமணியன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: