மூத்தோர் தடகள விளையாட்டு போட்டி

கடலூர், மே 21: கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 41வது அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.  போட்டிகளை ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்து  பேசியதாவது: கடலூரில்  நடைபெறும். மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1,200க்கும் மேற்பட்ட மூத்த தடகள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வருகை புரிந்துள்ளனர். 30வயது முதல் 90வயது வரை உள்ள பல்வேறு வயது பிரிவுகளில் 145 வகை போட்டிகள் நடைபெறுகின்றன.

முதன்முறையாக அகில இந்திய அளவில மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள் கடலூர் மாவட்டத்தில் நடைபெறுவது நமது மாவட்டத்திற்கு பெருமை அளிக்கிறது. போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கடலூர் மாவட்டத்தின் சார்பில்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Related Stories: