கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், மே 21:   சிதம்பரம் அருகே உள்ளது வையூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஓடை தெரு குளக்கரை தெரு ஆகிய இரண்டு பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் ஆண்டாண்டு காலமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த வீடுகளின் ஒரு பகுதி நீர்வழி ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அதனால் வீடுகளை இடித்து அகற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

வீடுகளை அகற்றி கொள்வதற்கு மாற்று இடம் வேண்டும் எனக்கூறி இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் நீர்வழி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. இதைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்படும் வீடுகளில் வசிக்கும் கிராம மக்கள் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று,

பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது தங்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டுதான் வீடுகளை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Related Stories: