85 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

திருப்பூர், மே 21: திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட அவினாசி ரோடு, சாமுண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரி ராஜேந்திரன் மற்றும் ஆய்வாளர் கோகுல்நாதன் மற்றும் அதிகாரிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாலித்தீன் பைகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், பழமுதிர் நிலையங்கள் போன்றவற்றில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதிகளில் இருந்த 44 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 85 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பாலிதீனம் பை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்களை விற்பனை செய்த 15 கடைகளுக்கு ரூ.11 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். மேலும், இதன் பிறகும் பாலித்தீன் பைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: