சுற்றுலா பயணிகளை கவர்ந்த ராணுவ வீரர்கள் இசை நிகழ்ச்சி

ஊட்டி,  மே 21: நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும்  சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா நிகழ்ச்சிகள் கடந்த 7ம் தேதி  கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது. தொடர்ந்து கூடலூரில்  வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டிகள், ரோஜா  பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி நடந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள்  பார்த்து ரசித்தனர். கோடை விழா நிகழ்ச்சிகளின் முக்கிய நிகழ்ச்சியாக ஊட்டி  தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி நேற்று துவங்கியது.

தொடர்ந்து  சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் வெலிங்டன் எம்ஆர்சி  ராணுவ படைபிரிவின் பேண்டு வாத்திய குழு சார்பில் பேண்டு வாத்திய இசை  நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமான  சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தது மட்டுமில்லாமல் செல்போன்களில்  புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இது தவிர பழங்குடியின மக்களின் கலாச்சார  நடனமும், நீலகிரியில் வசிக்கும் படுகர் இன மக்களின் கலாசார நடன  நிகழ்ச்சிகளும் நடந்தது.

Related Stories: