ஊட்டியில் மிதமான காலநிலை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி, மே 21: ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் மழை பெய்து வருவதால் ரம்மியமான காலநிலை நிலவுகிறது. ஊட்டியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களிலேயே மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று  காலை முதலே வானம் சற்று மந்தமாக காணப்பட்டது. பிற்பகலுக்கு மேல் சாரல் மழை  பெய்தது. இதனால் மிதமான காலநிலை நிலவுகிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கி தவிக்கும் சமவெளிப் பகுதி மக்கள் இந்த இதமான காலநிலையால்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 19 டிகிரி  செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியசாக  பதிவாகியிருந்தது.

Related Stories: